சிவகங்கை மாவட்டத்தில் சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம்.
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்ட சங்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் (புதுவயல் வட்டாரம்) மற்றும் மானாமதுரை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் `ஒப்பந்த அடிப்படையிலான மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3, செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பம் 19.07.2025 முதல் 31 .07.2025 வரை பதிவுத் தபால் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது,
எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் செயலாளர், சிவகங்கை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் 31.07.2025 ம் தேதிக்குள் பதிவுத் தபால் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக