கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கிய அமைச்சர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஜூலை, 2025

கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கிய அமைச்சர்கள்.


கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கிய அமைச்சர்கள்.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு தமிழக அரசின் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கி, சிறப்பு வாய்ந்த பள்ளி என்ற பெருமையை பெற்றுள்ளது.


தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது, கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற பள்ளிக்கு பாராட்டு விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூறு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாநில தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும், 10 இலட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது .


இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி மு.பாக்கியம் அவர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே. என்.‌நேரு மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் இந்த பள்ளி மட்டுமே விருது பெற்ற பள்ளியாக அறிவிக்கப்பட்டது. 


இச்சிறப்பு வாய்ந்த பள்ளி 2023-24ஆம் கல்வியாண்டில் பசுமை கல்விக்கான ரூபாய் 20 லட்சம் ஊக்கத்தொகை பெற்று, சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்தல், நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.


இந்த கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஐசிடி தொழில்நுட்பம் மூலமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு திட்டங்கள் மூலம் சிறப்பாக பணியாற்றி வரும் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும் இந்த விருது மதிப்பு மிக விருதாக கருதப்படுகிறது என பெற்றோர்களும், கிராம பொதுமக்களும் தெரிவித்தனர். விருது பெற்ற தலைமையாசிரியர் பாக்கியம் அவர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad