போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவகத்தில் பேருந்து சேவை அதிகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஜூலை, 2025

போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவகத்தில் பேருந்து சேவை அதிகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

 


போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவகத்தில் பேருந்து சேவை அதிகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபவ்யாதன்னீரு  அவர்களின் அறிவுரைப்படி


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஒருங்கிணைந்து நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து சேவை அதிகப்படுத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெகதீஸ் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ரவி முன்னிலை வகித்தார். 


நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன், புளுமாவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தலைவர் நாகேந்திரன், செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசும்போது


மாவட்டத்தில் ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மக்கள் தொகை அளவு அதிகரித்து உள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் எண்ணிக்கை சுமார் 35,000 பேர் இலவச பயணத்திற்கு பதிவு செய்துள்ளனர்.  ஆனால் உள்ளூர் பேருந்து சேவை என்பது போதிய அளவு இல்லை. பெரும்பான்மையான பேருந்துகள் வெளிமாவட்ட பேருந்துகளாக மற்றப்பட்டு விட்டன. இதனால் உள்ளூர் சேவை என்பது மேலும் குறைந்து விட்டதால் உள்ளூர் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே இயக்கி நிறுத்தப்பட்டுள்ள 110 பேருந்து சேவைகளை தொடர மீண்டும் அனுமதி கேட்டு பெற வேண்டும். வெளி மாவட்ட சேவைகளை குறைத்து கொண்டு உள்ளூர் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும். பேருந்துகளை சுத்தப்படுத்தி இயக்க வேண்டும். உரிய அட்டவணை  நேரங்களில் பேருந்து சேவையை இயக்குவதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். உதகை - மேட்டுப்பாளையம், உதகை - குன்னூர், உதகை - கூடலூர், கூடலூர் - பந்தலூர், உதகை கோத்தகிரி என வழித்தடங்களில் 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து அடிப்படையிலாவது முறைப்படுத்தி இயக்க வேண்டும். ஓட்டுநர் நடத்துனர்கள் பயணிகளிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும். கட்டண பட்டியல் அனைத்து பேருந்துகளிலும் ஒட்ட வேண்டும். கிளை மேலாளர்கள் அலைபேசி அழைப்பில் முறையாக எப்போதும் பயணிகளின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். ஒழுகும் பேருந்துகளை சரி செய்து இயக்க வேண்டும். கிளை மேலாளர்கள் பொதுமக்களின் அழைப்பை ஏற்கும் வகையில் செயல்பட வேண்டும். கோவை காந்திபுரம்பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மினி பேருந்துகள் இயக்குவதை காரணம் காட்டி இயங்கும் அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைக்க கூடாது என வலியுறுத்தினா்கள்.


பதில் அளித்த பொது மேலாளர் ஜெகதீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் நேர்முக உதவியாளர் ரவி ஆகியோர் பேசும்போது. நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் மூலம் போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் முதல்வருக்கு பரிந்துரை செய்கிறோம். 


நீலகிரியில் ஒருநாளைக்கு சராசரியாக 2 லட்சம் முதல் 2.30 லட்சம் பயணிகள் சென்று வருகின்றனர். மொத்தம் 337 பேருந்துகள் 11 நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் 140 பேருந்துகள் நீலகிரியில் மட்டும் இயக்கப்படுகிறது. 129 பேருந்துகள் கிராமங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மீதமுள்ளவை கிளைகள் இருந்து நேரடியாக வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. 


இவை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அடர்வுக்கு ஏற்ப உள்ளூர் சேவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பேருந்துகள் இயக்க மேலாண் இயக்குநர் ஒப்புதல் கேட்டு பரிந்துரை செய்துள்ள வழித்தடங்கள் அனுமதி கிடைத்தால் பொதுமக்களுக்கு கூடுதல் சேவை கிடைக்கும். பேருந்துகள் முறையாக இயங்குவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடத்துனர்கள் பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள அறிவுரை வழங்கப்படும். முறையான அறிவிப்புகள், மாற்றுதிறனாளிகள் இருக்கைகள் முறைப்படுத்தி அமைக்கப்படும். பழைய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்படுகிறது. தற்போது புதிய பேருந்துகள் ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டுள்ளது. பேருந்து வந்தவுடன் பழைய பேருந்துகள் மாற்றப்படும். மினிபேருந்துகள் இயக்கம்காரணம் காட்டி அரசு பேருந்து சேவை குறைக்க கூடாது என்பதையும் உதகை வரும் பேருந்துகள் கோவை காந்தி புரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிவரவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளித்து அரசின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். துணை பொது மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad