கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லிபாளையம் மேல்நிலைப்பள்ளியில் கவிதை தொகுப்பில் இணைந்த மாணவிக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லி பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேவபாண்டலம் கார் குழலி கல்வி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட எண்ணங்கள் வண்ணங்கள் கவிதை தொகுப்பில் இணைந்த மாணவி செ புவனேஸ்வரிக்கு இளம் கவிஞர் விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியர் செ ரமேஷ் தலைமையில் நடைபெற்றது முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் இளையராஜா அனைவரையும் வரவேற்றார் விழாவில் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க செயலாளர் கோ சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் பத்திரிக்கையாளர் குருசாமி பள்ளிக்கூடத்தின் நூலகத்திற்கு கார் குழலி கல்வி அறக்கட்டளை சார்பில் புத்தகங்களை வழங்கினார். நிறுவனர் இரா சு தாமோதரன் கலந்து கொண்டார் செயலாளர் தா வசந்தா நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் G. B. குருசாமி
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக