காங்கேயம் அருகே குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஜூலை, 2025

காங்கேயம் அருகே குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது



காங்கயம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எல்லப்பாளை யம்புதூர் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருபவர் செல்வராஜ் (வயது 51). இவர் எல்லப்பா ளையம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பங்காம்பாளையம் பகுதி யில் வசித்து வரும் மகேஷ்வரன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பிற்கு லஞ்சம் கேட்டதாக கூறப் படுகிறது.


இந்த நிலையில் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்த மகேஷ்வரன், அதிகாரிகளின் வழி காட்டுதலின் படி நேற்று காலை எல்லப்பாளையம்புதூர் ஊராட் சிக்கு சென்று செயலாளர் செல்வராஜிடம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

அப்போது ஊராட்சி அலுவலகத்திற்கு வெளியே மறைந்திருந்த திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்று லஞ்சப்பணத்தை வாங்கிய செல்வராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அலு வலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.71 ஆயிரத்து 500 ரொக்கத்தையும் கைப்பற்றினர்.


இதுகுறித்து ஊராட்சி செயலாளர், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad