அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஜூலை, 2025

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு 14-07-2025, திங்கட்கிழமை நடைபெற உள்ளது. 


அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நிலோபர் பேகம் தெரிவித்ததாவது,  2025 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு  அரசு அறிவித்துள்ள 20 சதவீத கூடுதல் இடங்களுக்காக,  அனைத்துப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு 14-07-2025,  திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரியின் உமையாள்

 

அரங்கில் நடைபெற உள்ளதால்  விண்ணப்பித்துள்ள மாணவர்கள் உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad