திருப்பூர் எம்எல்ஏ தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

திருப்பூர் எம்எல்ஏ தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை


தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முன்னெடுத்து தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் திமுக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது இதில் ஒரு பகுதியாக 

திமுக தலைவர்;  மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதல் படி திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் திருப்பூர் மத்திய மாவட்டம், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட நல்லூர் பகுதி, 47-வது வார்டில்    ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் தொடர்ச்சியாக திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது 

மற்றும் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் பரப்புரை செய்தனர்


இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு நாகராசன்

மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள்,‌ பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், மற்றும் திமுக உடன்பிறப்புகள் திரளாக பங்கேற்றனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad