மதுரை சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து, பேராவூரணியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரியார் சிலை அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராளுமன்ற விவாதத்தில், ஒன்றிய அரசை விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து, பாஜகவினர் அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் தொலைபேசியில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியக்குழுக்கள் சார்பில் பேராவூரணி பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், எம்.செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, விவசாயிகள் சங்கம் ருக்கூன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதில், பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்தும், சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங் பரிவார் நபரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேராவூரணி நிருபர் நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக