நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை உலுக்கியது. பெண் விவகாரத்தில் இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வரும் சூழலில் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தற்போது நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
வழக்கு தொடர்பாக அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கவின் கொலையில் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் வழக்கில் ஏற்கனவே கைதான சுர்ஜித் என்பவரின் தந்தையான போலீஸ் அதிகாரி சரவணன்( எஸ்ஐ) நேற்று 30.07.2025 கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு இவர் மூளையாக செயல்பட்டதாக கவின் தரப்பினர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
செய்தி - நெல்லை தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக