அஜித்குமாரின் சகோதரர் மற்றும் தாயாரிடம் பணி நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தில் திருப்புவனம் காவலர்கள் தாக்கியதில் மரணம் அடைந்த அஜித்குமாரின் சகோதரர் மற்றும் தாயாருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் அளித்த உத்தரவின்படி, கூட்டுறவுப் பால் சங்கத்தில் டெக்னீசியன் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் திருமதி கா. பொற்கொடி, மாவட்ட துணை செயலாளர் செங்கை மாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் திரு மாரியப்பன் கென்னடி, அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக