கோவையில் குற்றச் சம்பவங்களை தடுக்க ''SMART KHAKKIS'' திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் (SMART KHAKKIS)என்ற புதிய திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்துள்ளார்.இந்தத் திட்டத்தின் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும் ,ரோந்து பணிகளை வேகப்படுத்தவும், புதிய கருவிகள் மற்றும் வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்களை செயலி மூலம் பதிவு செய்து அவர்களின் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் .இருசக்கர வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும் .எஸ்பி தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக