108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கை கள் குறித்து போராட்ட ஆய்த்தக்கூட்டம்!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கை கள் குறித்து போராட்ட ஆய்த்தக்கூட்டம்!!

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கை கள் குறித்து போராட்ட ஆய்த்தக்கூட்டம்!!

வேலூர் , ஆகஸ்ட் 6-

இரவு பகல் பாராமல் உயிரைக் காப்பாற் றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கோ ரிக்கைகளை நிறைவேற்றுமா தமிழக அரசு!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலை, ஏலகிரி அரங்கில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்தகூட்டம், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 16% க்கு குறைவாக ஊதிய உயர்வு வழங்கக் கூடாது என தமிழக அரசு உடனான ஒப்ப ந்தத்தை பின்பற்றாமல் தன்னிசையாக, ஊதிய உயர்வை குறைத்து வழங்கிய தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட்டு 2025 2026க்கான ஊதிய உயர் வை முறையாக வழங்கிடவும்சட்டவிரோத பணி நீக்கத்திற்கு எதிராகநீதிமன்றங்கள் வழங்கி உள்ள தீர்ப்பின்படி பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண் டும் வேலை வழங்கிட கோரியும், சட்டவி ரோத 12 மணி நேர வேலை நேரத்தை கைவிட்டு, 8 மணி நேர, 3ஷிப்ட் முறையை நடைமுறைப்படுத்திடவேண்டியும் வேலூர் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட 108 ஆம்பு லன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்தக்கூட்டம், மாநில தலைவர் சிவக்குமார், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பொரு ளாளர் சாரதிவேல் ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது. இதில் மாநில, மாவ ட்ட அளவிலான நிர்வாகிகள்பொறுப்பாள ர்கள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆம்புலன்ஸ் ஊழி யர்கள் இரவு பகல் பாராமல் உயிரை காப் பாற்றி வரும் தொழிலாளர்களின் கோரிக் கைகளை நிறைவேற்றுமா இந்த தமிழக அரசு  மத்திய மாநில அரசுகள் 108 ஆம்பு லன்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad