கோவை ஸ்ரீ அபிராமி கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது...
கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது இங்கு நர்சிங், பார்மசி, தொழில் சார் சிகிச்சை, பிசியோதெரபி ,மற்றும் துணை சுகாதார அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது.
இதன் 14 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சிவி ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ பி ஐ- பி ஆர் எஃப் இயக்குனர் டாக்டர் முருகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினர் .இதில் 284 பட்டதாரி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பட்டங்களை பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக