ஈரோடு அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது ஈரோடு மாவட்டம் அரச்சலூர் வெள்ளியங்கிரி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (47). இவர் அரச்சலூர் பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் தேவராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமி காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100-க்கு அழைத்து புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து அரச்சலூர் போலீசார் இது குறித்து விசாரித்த போது தேவராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து தேவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை அரச்சலூர் போலீசார் கைது செய்தனர்.
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக