தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டியில் தேனிகள் கொட்டியதில் 15 பேர்காயம் மருத்துவமனையில் அனுமதி!
வாணியம்பாடி,ஆக.28-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி மல்லங்குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் மண்டி உள்ளது. தேங்காய் மண்டியில் இன்று சுமார் 20 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ள னர் . அப்போது ஒரு பகுதியில் கட்டி இரு ந்த தேன் கூண்டு கலைந்து அங்கு தேங் காய் உரிக்கும் பணியில் ஈடுபட்ட ஆண் கள் மற்றும் பெண் தொழிலாளர்களை கொட்டியுள்ளது. இதில் 15 க்கும் மேற்பட் டோர் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு ராமநாயக் கணன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு அங்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தற்போது ராம நாயக்கன் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 பேரும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 8 பேரும் சிகிச் சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக