உளுந்தூர்பேட்டையில் முதல்வரின் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் துவக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

உளுந்தூர்பேட்டையில் முதல்வரின் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் துவக்கம்.

 


உளுந்தூர்பேட்டையில் முதல்வரின் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் துவக்கம்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்து மாநிலம் முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம், இன்று உளுந்தூர்பேட்டை நகராட்சி டேனிஷ் மிஷன் துவக்கப் பள்ளியில் சிறப்பாக துவங்கியது. இந்த திட்டத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், நகராட்சி ஆணையர் புஸ்ரா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் மேலும் உளுந்தூர்பேட்டை நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மாணவர்களின் உடல்நலமும், கல்வியில் கவனச்சேர்க்கையும் மேம்படும் நோக்கில் இந்த விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தினமும் பல்வேறு வகையான சத்துணவு உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad