திருப்பூரில் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக 15 வேலம்பாளையம் பகுதியில் திண்ணை பிரச்சாரம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 ஆகஸ்ட், 2025

திருப்பூரில் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக 15 வேலம்பாளையம் பகுதியில் திண்ணை பிரச்சாரம்


திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் திமுக அரசின் நான்கரை ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சியைப் பற்றி அதில் நடக்கும் அவலங்களைப் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பாக வாரம்தோறும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுக்கும் திண்ணை பிரச்சாரம் 28 வது வாரமாக (23.8.2025) சனிக்கிழமை அன்று 15 வேலம்பாளையம் பகுதி கழகத்தின் புரட்சித்தலைவி அம்மா பேரவை பகுதி கழக செயலாளர் 

K.குணசேகரன் அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு பொள்ளாச்சி V. ஜெயராமன் MLA, அவர்களும், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.N விஜயகுமார் MLA, மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயலாளர் அட்லஸ் லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் 

மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவரும் தென்னம்பாளையம் பகுதி கழகத்தின் செயலாளர் அன்பகம் திருப்பதி அவர்களும், திருப்பூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சி கொறடாவும், தெற்கு மத்திய பகுதி கழகத்தின் செயலாளருமான திரு கண்ணப்பன் அவர்களும், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன் அவர்களுடன், அனைத்து பகுதி கழக செயலாளர்களும், கழக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் 15 வேலம்பாளையம் பகுதி கழகத்தின் செயலாளர் வெ. அ. கண்ணப்பன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad