திருப்பூர் SDPI கட்சி வடக்கு மாவட்டம், வடக்கு தொகுதி V. மேட்டுப்பாளையம் கிளை சார்பாக சாலைகள், குடிநீர் குழாய், தெரு நாய்களின் தொல்லை மற்றும் சாக்கடைகளை சீரமைத்தல் கோரிக்கைகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இந்நிகழ்வில் V.மேட்டுப்பாளையம் கிளை தலைவர் A. யாசர் அராபாத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலாளர் A. அப்துல் சத்தார் அவர்கள்,
SDPI கட்சியின் வடக்கு தொகுதி தலைவர் A. முகமது யாசின் அவர்கள்,
SDPI கட்சியின் வடக்கு செயற்குழு உறுப்பினர் S.அப்பாஸ் அவர்கள்,
SDPI கட்சியின் மேட்டுப்பாளையம் கிளை துணைத் தலைவர் S. ஷேக் அலாவுதீன் அவர்கள்,
SDPI கட்சியின் கோல்டன் நகர் கிளை தலைவர் K.செய்யது கமால் அவர்கள், SDPI கட்சியின் கோல்டன் நகர் கிளைச் செயலாளர் ஏ அப்துல் அஜீஸ் அவர்கள்,
SDPI கட்சியின் M.S நகர் கிளை தலைவர் அன்சாரி அவர்கள்,
மற்றும் சாஹூல், கலீல், அசார், பாஷா (எ)சையது இப்ராஹிம், முபாரக் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
1000 நபர்களிடம் கையெழுத்து பெற்று 30 வது மாமன்ற உறுப்பினர்திருமதி.புஷ்பலதா தங்கவேல் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக