விவசாய சங்க தலைவர் ஜி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நமது வனம் அமைப்பின் சார்பில் மழை வேண்டி பிரார்த்தனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 ஆகஸ்ட், 2025

விவசாய சங்க தலைவர் ஜி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நமது வனம் அமைப்பின் சார்பில் மழை வேண்டி பிரார்த்தனை கூட்டம்


திருப்பூரில் நமது வனம் அமைப்பின் 512 ஆம் வாராந்திர மழை வேண்டி பிரார்த்தனை கூட்டத்திற்கு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க நிறுவன தலைவர் ஜிகே விவசாய மணி என்கின்ற ஜி சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தாய்மண் சிறு தானிய உணவகம் ரகுநாதன் திருப்பூர் மகாவீர் கார்மெண்ட்ஸ் ராமகிருஷ்ணன் பாலாஜி புரமோட்டர்ஸ் பாலசுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டு வனப் பிள்ளையாருக்கு வழிபாடு மேற்கொண்டும்

மூவர் முற்றத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் மகாத்மா காந்தி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் சங்க தலைவர் ஜிகே விவசாய மணி என்கின்ற ஜி சுப்பிரமணியம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார் மூலிகை வனத்தில்  வெற்றிலை மூலிகை செடிகளை நடவு  செய்தும் செயலாளர் ஸ்கைவே சுந்தர்ராஜ் அவர்கள் உலக நன்மை வேண்டி தவம் இயற்றினார் தலைவர் சுவாதி சின்னச்சாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார் பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் இணைச் செயலாளர் நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தனர் இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார் அன்னம் பாலிப்பு வழங்கிய அறங்காவலர் கலைமகள் டெக்ஸ்டைல்ஸ் ஆனந்தகுமார் அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார் இத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad