கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் அருகே நிலத் தகராறு காரணமாக, நூருல்ஃஷிதரா என்ற பெண் தலைமையில் சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜேசிபியுடன் வந்து, பூமிவேல்குமார் (57) என்பவரின் வீட்டை இடித்து தாக்க முயன்றனர்.
வீட்டில் இருந்தவர் உடனடியாக 100க்கு அழைத்ததால், கன்னியாகுமரி காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. போலிஸாரை கண்டதும் கும்பல் தப்பி ஓடியது. வீட்டின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அந்த பெண் உட்பட 15 பேர்மீது கன்னியாகுமரி காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக