நகராட்சி சார்பில் மரக்கன்று நடவு
பந்தலூர் புனித சேவியர் ஆரம்பப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
நெல்லியாளம் நகராட்சி தீவிர தூய்மை பணிகளுக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் பந்தலூர் புனித சேவியர் ஆரம்பப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் சக்திவேல், பொறியாளர் விஜயராஜ், மேலாளர் சுகுமாரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜாஸ்மின், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அறிவழகன், நகர மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் 25க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஜெபமாலை, பெர்ட்டிஷா, நகராட்சி தூய்மை களபணி மேற்பார்வையாளர் மலர்க்கொடி, தூய்மை இந்தியா திட்டம் பணியாளர்கள் தினேஷ், சிந்துஜா, சுபஶ்ரீ, சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணி மற்றும் நகராட்சி பணியாளர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக