கூட்ட நெரிசல் அதிகமாகி வருவதால் சிவகங்கை - மானாமதுரை பேருந்து வழித்தடத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையானது மாலை நேரத்தில் குறைவாக உள்ளதால் பேருந்து பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நிர்ணயத்த பேருந்து பயணிகளின் எண்ணிக்கையானது 57, 58 என்ற கணக்கில் பேருந்து இருக்கைகள் கொண்ட நிலையில், தற்போது தமிழக முழுவதும் பேருந்தில் கூட்ட நெரிசலோடு பயணம் மேற்கொள்ளும் பேருந்து பயணிகளின் எண்ணிக்கையானது நூரைத் தாண்டும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்தின் எண்ணிக்கைகளையும் அரசு அதிகப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை 7 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 முதல் 7 மணி வரை ஆகிய நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லுவோர் அதிகமாக பேருந்துகளை உபயோகப்படுத்துவார்கள்.
மேலும் பகல் நேரங்களில் பயணிகளே இல்லாமல் பேருந்துகள் இயங்குவதையும் நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் நம்முடைய கவனத்திற்கு எட்டாத வகையில் பேருந்துகள் செல்லாத ஊர்களும், வழித்தடங்களும் கூட இருக்கலாம் அல்லவா. இதன் காரணமாக அதிகமான கூட்ட நெரிசல் உள்ள மற்றும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள வழித்தடங்களில் பேருந்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி பல கிலோமீட்டர் தூரம் நின்று கொண்டு கூட்ட நெரிசலில் அவதிப்பட்டு வரும் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் வெளியில் சொல்ல முடியாத துயரங்களை, சுமைகளை, வேதனைகளை இன்னல்களை தீர்த்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தற்போது சில டவுன் பேருந்துகளில் புதிதாக கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட பல பேருந்துகளில் டிரைவர்களின் பாதுகாப்பிற்கான சீட் பெல்ட் இல்லாதது கவனத்தில் கொண்ட கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கூடுதலாக அரசு ஆணைகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் பேருந்து ஓட்டுநர்கள் சரிவர பின்பற்றாமல் இருந்து வரும் அவல நிலை தமிழகம் முழுவதும் நீடிக்க தான் செய்கிறது. தற்காலத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கும், வாகனங்களுக்கும் இடையே சமயோசித்தனமாக திறம்பட ஓட்டுனர்கள் செயல்படாததை பார்க்கும் போது வருத்தமளிக்கிறது.
எடுத்துக்காட்டாக பேருந்து நிறுத்தங்களை தவிர்த்து பேருந்து நிறுத்தத்திற்கு முன்னாலோ அல்லது பின்னாலோ, பயணிகள் கூட்டமாக நிற்கும் இடம்தான் பேருந்து நிறுத்தம் என்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் தாங்களாகவே நினைத்துக் கொண்டு பேருந்துகளை நிறுத்துவதும் இயக்குவதும் கண்டிக்கத்தக்கது.
எனவே மாதம் ஒரு முறையாவது பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டங்கள், கருத்து கேட்புகள் நடைபெற வேண்டும் என்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடம் சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்கள் மேற்கொள்ளும் தவறுதலான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் சுட்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சிரன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்ளுதலும் இன்றைய கால சூழ்நிலையில் மிகவும் அவசியம் என்று தெரியவருகிறது.
ஏன் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றால், "லஞ்சம் வாங்குவது மற்றும் லஞ்சம் கொடுப்பதும் தவறுதான்" என்பது போல அரசு நிர்ணயித்த பேருந்து பயணிகளின் எண்ணிக்கையை காற்றில் பறக்க விட்டு தாங்கள் செய்வது தவறு என்று சிறிதும் உணராமல் நூற்றுக்கணக்கான பேருந்து பயணிகளை ஆடு, மாடு, கோழிகள் என்று நினைத்தார்களோ என்று தெரியவில்லை மந்தையில் அடைத்து வைப்பது போல அடைத்து வைத்து ஆபத்தான பயணம் மேற்கொள்ளச் செய்து , நோய்த்தொற்று அபாயத்தை ஏற்படுத்தி, பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து விடாத அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று உங்களிடமே விட்டு விடுகிறேன்.
ஏற்கனவே கொரோனா காலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கு பின்னரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் கூட்ட நெரிசல்களை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியதை கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் நினைவுபடுத்தியே ஆகவேண்டும் அல்லவா.
ஆண்டு கணக்கில் பேருந்தில் கூட்ட நெரிசலோடு பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் பழகிவிட்டனர் கூட்ட நெரிசலுக்குள் பயணச்சீட்டு வழங்கி வரும் நடத்துனர் பழகிவிட்டார், இவ்வளவு எடைதான் தாங்குவேன் என்ற பேருந்தும் தன்னை மறந்து பேருந்து ஓட்டுனர் நடத்துனர் மற்றும் பயணிகளை இந்நாள்வரை சுமந்து சென்று கொண்டு தான் இருக்கிறது.
ஆனவே பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீதுதான் முழு தவறு உள்ளது என்று கூறிவிட முடியாது, அரசு ஒவ்வொரு வழித்தடத்திலும், ஒவ்வொரு பேருந்திலும் பயணிகளின் எண்ணிக்கையை முறையாக கணக்கிட்டோ ஆவணப்படுத்தியோ பேருந்து வசதிகளை சீர் செய்து மேம்படுத்திட முன்வர வேண்டும்.
ஒரு அரசு பொதுமக்களை சமூகத்தின் பார்வையில் எப்படி கையாளுகிறது என்பதை அந்தந்த மாநிலத்தில் உள்ள பேருந்து பயணங்களை பார்த்தாலே முடிவுக்கு வந்துவிடலாம். இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் உள்ளது போல் வேறு எங்கும் இவ்வளவு வழித்தடங்களும், பேருந்து வசதிகளும் கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
மேலும் சிவகங்கை முதல் மானாமதுரை வரை மிக முக்கியமாக மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாகி வருவதால் பயணிகளுக்கும், பயணிகளின் உடமைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.
இதில் வேதனையிலும் வேதனை என்னவென்றால் எத்தனையோ புகார்கள், மனுக்கள் அளிக்கப்படும் தருவிக்கப்பட்டும் ஒரு விடை கிடைக்காத புதிராக சிந்துபாத் கதையாக, இக்குறிபிட்ட சிறிய பிரச்சனையானது தொடர்பு கொண்டு தான் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.
ஒன்று இரண்டு பேருந்துகளை அதிகப்படுத்துவதால் அரசுக்கு பெரிய நஷ்டம் ஏற்பாடு போவதில்லை என்று சிலர் கூறுவதை கேட்டிருப்போம், தற்போது இக்குறிப்பிட்ட சிவகங்கை மானாமதுரை வழித்தடத்தில் வருவாய் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை அரசின் வாருவாயில் லாப நட்ட கணக்குகளை விட பொதுமக்களின் நலனில்தான் அரசு தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதால், ஒன்று இரண்டு பேருந்துகளை அதிகப்படுத்தி பொதுமக்களின் துயரங்களைப் போக்க அரசு போக்குவரத்து கழகமும், தமிழ்நாடு அரசும் முன் வர வேண்டும் என்பதே தீர்வாகும்.
எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, நிரந்தரமாக காலையில் குறைந்தபட்சம் ஒரு பேருந்து, மாலை வேளையில் குறைந்தபட்சம் ஒரு பேருந்தையாவது கூடுதலாக இயக்க பள்ளியில் கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்கள், தொழிலாளர்கள், மருத்துவ நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தங்கள் சார்பாக வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக