உதகை பெத்லகேம் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 ஆகஸ்ட், 2025

உதகை பெத்லகேம் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

 


உதகை பெத்லகேம் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 


நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 30/08/25 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 3 வது முறையாக நடைபெற்றது.


முகாமில் ECG, Ultra Sound, X Ray, Echo, Cbc, Urea Creatine, cholesterol இரத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது,


இந்த முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சோமசுந்தரம் தலைமையில் நடைெற்றது.


இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.முருகேசன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் புனிதா,  உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அனைத்து வித சிறப்பு மருத்துவர்கள்,செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad