கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வளையமாதேவியில் அதிமுக அம்மா பேரவை சார்பில் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண் மொழித்தேவன் பங்கேற்று பொதுமக்கள், வணிகர்கள், குடியிருப்பு வாசிகள் என பலரிடத்திலும் அதிமுகவின் சாதனைகள் குறித்த நோட்டீசையும், திமுகவின் மக்கள் விரோத போக்கு ஆட்சியைப் பற்றியும் எடுத்துக் கூறியும் துண்டு பிரசுரம் வழங்கியும், திண்ணைப் பிரச்சாரமும் செய்தனர். ஒன்றிய கழக செயலாளர் சி.என். சிவப்பிரகாசம், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சபரி உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக