இராமநாதபுரம் கீழக்கரை அருகே இலவச பாத சிகிச்சை தெரபி தொடர் மருத்துவ முகாம்15 நாட்கள் நடைபெறுகிறது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

இராமநாதபுரம் கீழக்கரை அருகே இலவச பாத சிகிச்சை தெரபி தொடர் மருத்துவ முகாம்15 நாட்கள் நடைபெறுகிறது.

இராமநாதபுரம் கீழக்கரை அருகே இலவச பாத சிகிச்சை தெரபி தொடர் மருத்துவ முகாம்
15 நாட்கள் நடைபெறுகிறது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் ஏர்வாடியில் முதன்முறையாக இலவச பாத சிகிச்சை தெரபி தொடர் மருத்துவ முகாம் நடைபெற உ‌ள்ளது. 

நேற்று முதல் வருகிற ஆக.18-ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள், இம்முகாம் ஏர்வாடியில் உள்ள அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ குத்பா பள்ளிவாசல் வளாகத்தில் (மடம் எதிரில்) நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 'ஹெல்த்கேர் வெல்வெட் சென்டரின்' திண்டுக்கல் கிளையுடன் ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. 

இந்த முகாமை துவக்கி வைத்தவர் அல் மஸ்ஜிதுல் ஜாமியா குத்துப பள்ளிவாசல் முத்தவல்லி அம்ஜத் உசேன்
செயலாளர் ஹாஜி செய்யது உசேன்
இம்முகாமில் சிகிச்சை பெறுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக, நரம்புகளின் செயல்திறனை அதிகப்படுத்தி, உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் உறுப்புகளை சீராக இயங்க செய்ய முடியும். உடலில் தசை மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் குறைக்க முடியும்.
 மேலும் பாதவலி, பாத குத்தல், பாதம் மரத்து போகுதல், பாத எரிச்சல், காலில் நரம்பு சுருண்டு இருத்தல், தசைப்பிடிப்பு, முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும் தகுந்த நிவாரணம் பெற முடியும்.
  
தினமும் காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad