40 வருடங்களாக வாழும் நிலம் சொந்தமில்லையே என்ற ஏக்கத்தை போக்கிடும் பொருட்டு திருப்பூர் தெற்கு தொகுதியில்
தலைமுறை தலைமுறையாக
பட்டா இன்றி தவித்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ராயபுரம் எம்ஜிஆர் நகர் பகுதி மற்றும் மிலிட்டரி குடியிருப்பு பகுதியில் 64 குடும்பங்களுக்கும் மற்றும் கொங்கணகிரி பகுதியில் நூத்தி முப்பத்தி நாலு குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான க. செல்வராஜ் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியின் பலனாக,
இராயபுரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதி மற்றும் மிலிட்டரி குடியிருப்பு பகுதி 64 குடும்பங்களுக்கும் மற்றும் கொங்கணகிரி பகுதி 134 குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது தங்களது பல ஆண்டு கனவினை
நனவாக்கி தந்து,
வாழ்விற்கும் வாழும் வீட்டிற்கும்
உற்ற துணையாக அங்கீகாரம் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் MLA அவர்களுக்கும் பயனாளிகள் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் தெற்கு மாநகரச் செயலாளர் டி கே டி மு நாகராசன் மாநகர மாணவரணி அமைப்பாளர் எஸ் திலக்ராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக