வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோகுட்கா பொருட்கள் பறிமுதல்!
வேலூர் , ஆகஸ்ட் 26 -
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பவர்கள்மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போ தைப்பொருட்கள் விற்பவர்கள் மற்றம் கடத்துவர்களை பிடிக்க மாவட்டம் முழு வதும் காவல் துறையினர் தீவிர சோத னையில் ஈடுபட்டு வந்தனர். அதில் கடந்த 23.08.2025-ம் தேதி விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போ தைப்பொருட்கள் விற்கப்படுவதாக கிடை த்த இரகசிய தகவலின் அடிப்படையில் SI. ராஜசேகர் அவர்களின் தலைமையிலான போலீசார் திருமலை என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 2.5 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி விசார ணை செய்தனர். அதன் தொடர்ச்சியாக 24.08.2025-ம் தேதி அரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாஜி என் பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 3.5 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி விசாரணை செய்தனர் இரு வரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர்களுக்கு வேலூர்ஆர்.என்.பாளைய த்தை சேர்ந்த தபாரக் பாஷா, (வயது44) த/பெ.அப்துல் ரசாக் என்பவர் குட்கா பொரு ட்களை சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், 35 கிலோ குட்கா பொரு ட்களுடன். தபாரக். பாஷாவை கைது
செய்து குட்கா பொருட்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றது என விசாரணை செய்ததில், ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியை சேர்ந்த குமாரிடமிருந்து வாங்குவதாக தபாரக் பாஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அடிப்படையில் இன்று 26.08.2025-ம் தேதி சட்டவிரோத மாக TN 09 BR 5171 என்ற நான்கு சக்கர வாகனத்தில் 150 கிலோ குட்கா பொரு ட்களை விற்பனை செய்ய வந்த குமார், (வயது 40), த/பெ.துரைசாமி, பலமனேரி என்பவரை கைது செய்து அவரிடம் விசா ரணை மேற்கொண்டதில், லத்தேரி பகுதி யை சேர்ந்த ரவி மற்றும் கொணவட்டம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் களுக்கு சப்ளை செய்ய வந்ததாக கூறிய தையடுத்து ரவி, த/பெ.வாசுதேவன் மற்றும் சசிகுமார், (வயது 50), த/பெ.சுப்பி ரமணி, கொணவட்டம் என்பவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல்துறையின் சார்பாக எச்சரிக்கப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக