ரூ 5 லட்சத்தை கொள்ளை வழக்கில் சென்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரத்தின குமார் என்பவர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

ரூ 5 லட்சத்தை கொள்ளை வழக்கில் சென்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரத்தின குமார் என்பவர் கைது!

 ரூ 5 லட்சத்தை கொள்ளை  வழக்கில் சென்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரத்தின குமார் என்பவர் கைது! 

வாணியம்பாடியில் , ஆகஸ்ட் 26 -

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாலப்பனூர் பகுதியை சேர்ந்த வர் சுப்பிரமணி. இவர் வாணியம்பாடி மலங்கு சாலையில் புதியதாக வீடு கட்டி வருகிறார்.இந்நிலையில் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை ஒப்பந்த தாரரான ஜெயபால் என்பவரிடம் அளித்து ள்ளார். அதனை பெற்றுக்கொண்ட ஜெய பால், வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள வங்கிக்கு சென்று ரூபாய் 5 லட்சத் தை எடுத்துக் வந்து சுப்பிரமணியிடம் ஒப்படைத்துள்ளார்.சுப்பிரமணி பணத் தை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்த பின்னர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வெளியில் வந்து பார்த்த போது இருசக்கர வாகனத் தின் வைத்திருந்த ரொக்க பணம் காணா மல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். சம்பவம் குறித்து சுப்பிரமணி வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குபதிவு செய்து அப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தும், குற்ற
செயல்முறை அடிப்படையில் குற்றவாளி யை தேடி வந்தனர் இந்நிலையில்  ஸஜ்சென்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரத்தின குமார்(வயது 44) என்பவ ரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார்.இதனை தொடர்ந்து அவ ரை நகர காவல் நிலையத்திற்கு அழை த்து சென்று தீவிர விசாரணை மேற் கொ ண்டதில் அவர் வாணியம்பாடி மலங் சா லையில் இருசக்கர வாகனத்தில் வைத்தி ருந்து ரூபாய் 5 லட்சம் ரொக்கம் கொள்ஷ ளை அடித்தது ஒப்புக்கொண்டார்இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்து அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


 திருப்பத்தூர் தமிழக  குரல் செய்தியாளர்
மஞ்சுநாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad