தமிழன்னையின் முத்தமிழ் திருவிழா - 2025
மலை மாவட்டத்தில் தமிழுணர்வால் இணைந்த தமிழ் ஆர்வலர்களின் தமிழியக்கம் நீலகிரி மாவட்டத்தின் சார்பில் முத்தமிழ் திருவிழா - 2025 நிகழ்ச்சி இன்று உதகை எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஒளவை அருள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் வசந்தகுமாரி, மலைச்சொல் கலை இலக்கிய மையம் அமைப்பாளர் வழக்கறிஞர் பால நந்தகுமார், நீலகிரி மாவட்ட நூலக அலுவலர் கிளமண்ட், அமைதி குழுத் தலைவர் பி.கே கிருஷ்ணன், நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பு தலைவர் கண்டோன்மென்ட் வினோத் குமார் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். பட்டிமன்றம், கவியரங்கம், கலைநிகழ்ச்சிகள், திருக்குறள் முற்றோதல் ஆகியவை நடந்தேறின. இவ்விழாவில் 150 தமிழ் ஆர்வலர்களுக்கு விருதுகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ரமணா, இணைசெயலாளர் புலவர் சாலினி, தகவல் தொடர்பாளர் ஜாபர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழியக்கம்மாவட்ட செயலாளர் புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக