வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்!
வேலூர்,ஆகஸ்ட் 23-
வேலூர் மாவட்டம் எல்லைக் குட்பட்ட
அனைத்து வனப்பகுதிகளிலும் வனத் துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் கள்ளத் துப்பாக்கிகளை சமர்ப்பிக்க கோருதல் கூட்டம் நடைபெற்றது வனத் துறையுடன் இணைந்த கிராமப் பகுதி களில் விழிப்புணர் கூட்டம்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேலூர் மாவட்ட எல்லைக்குட் பட்ட அனைத்து வனச்சரக, வனப்பகுதி களிலும் வனத்துறை சார்பில் வன விலங் குகளை பாதுகாத்தல் குறித்த விழிப்புண ர்வு மற்றும் கள்ளத் துப்பாக்கிகளை சமர்ப்பிக்க கோருதல் கூட்டம் மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து தாலுகா வனச்சரக பகுதிகளிலும் தலைமை வன பாதுகாவலர் ஏ.எஸ். மாரிமுத்து, மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார், மாவ ட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாக னன் ஆகியோரின் உத்தரவுபடி, உதவி வன பாதுகாவலர் எஸ்.மணிவண்ணன் தலைமையில் இந்த விழிப்புணர்வு நடந்தது. வேலூர் மாவட்ட எல்லைக்குட்ப ட்ட அணைக்கட்டு தாலுகா,அல்லேரிமலை ஜார்தன் கொள்ளை மலை கிராமங்கள் வரதலம்பட்டு, கீழ்கொத்தூர், பிஞ்சமந் தை, தொங்குமலை, குடியாத்தம் தாலுகா, மோர்தனா, சைனகுண்டா, தனகொண்ட னப்பள்ளி, சேம்பள்ளி, வெள்ளரி, பேர் ணாம்பட்டு தாலுகா, அரவட்லா, பாஸ்மார் பெண்டா, மசிகம், சாரங்கல் மற்றும் மாவட்ட அளவிலான வனச்சரக பகுதி களில் அருகில் உள்ள கிராமங்களில் வனத்துறையும் காவல்துறையும் இணைந்து பொதுமக்களிடம் வன உயிரின வேட்டையில்லா வேலூராக மாற்ற விழிப்புணர்வு மற்றும் இக்கூட்ட த்தில் வனங்களையும் மன உயிரினங்க ளையும் பாதுகாக்கவும் உரிமம் இல்லா மற்றும் கள்ளத்தொப்பாக்கிகளை தாமாக முன்வந்து வனத்துறை காவல்துறை வருவாய்த்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் 10 9 2025-ம் தேதிக்குள் ஒப்படைக்க வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெற்றது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக