தமிழக குரல் செய்தி நிறுவனம் பெருமையுடன் வழங்கும் வேள்பாரி குளோபல் விருது 2025
தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் சார்பாக வருட தோறும் வரும் தன்னார்வலர் தினத்தை போற்றும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது "அரசியல், கலைத்திறன், சமூக சேவை, பசியாற்றுதல் சேவை, திருநங்கை திரு நம்பிகள் சேவை, ரத்ததான சேவை, மரம் நடுதல் சேவை, முதியோர் சேவை, இன்னும் பல சேவைகளை" போற்றும் வகையில் விருத்தாளர்களை சரியான முறையிலும், சரியான விதத்திலும், தேர்வு செய்து அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஊக்கு வைப்பது குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது
"ஊக்குவிப்பவனை சரியான நேரத்தில் ஊக்குவித்தால் ஊக்குவிப்பானும் தேக்கு விப்பான்" எனும் பழமொழியை இந்நேரத்தில் மெய்மொழியாக்கி வருகிறது
இந்நிலையில் இந்த ஆண்டு வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி காலை 10 மணி அளவில் தர்மபுரியில் தமிழகத்தின் கடையேழு மன்னர்களின் ஒருவரின் பெயரை போற்றும் வகையிலும் சமூக சேவை செய்யும் தன்னார்வலர்களை அவரது பெயருடன் ஊக்குவிக்கும் வகையிலும் வேள்பாரி மன்னரின் பெயரில் விருது வழங்க ஆயுத்தப்படுத்தி வருகிறது இந்த வேள்பாரி குளோபல் விருது - 2025 -தை அனைவரும் ஆர்வமுடன் இணையதளத்தில் பதிவு செய்து வருவது தமிழக குரல் செய்தி நிறுவனத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இதுபோன்று இன்னும் பலரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் ஆர்வமும் எங்களுக்கு உருவாகி உள்ளது இதுவரையிலும் விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக குரல் செய்தி நிறுவத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து தங்களது சாதனையை நிலை நிறுத்தும் மேடையை தேர்வு செய்து கொள்ளுமாறும் தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
என்றும் நமது குரல் நமக்கான குரல் என்று மக்களின் அடிப்படைத் தேவைகளை நடுநிலையோடும் இணையத்தில் சேவை செய்து வரும் தமிழக குரல் செய்தி நிறுவனம் இந்த விருது வழங்குவதற்கு எங்களுடன் தோள் கொடுக்க விரும்புவர்களும் எங்களை அழைக்கலாம் எங்களின் https://www.tamilagakural.com இணையம் வழியாக எங்களை தொடர்பு கொள்ளலாம்...
என்றும் மக்கள் சேவையில் தமிழக குரல் இணையதள செய்தி நிறுவனம்...

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக