நீலகிரி எல்லையில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் புகார்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

நீலகிரி எல்லையில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் புகார்:

 


நீலகிரி எல்லையில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் புகார்:


பந்தலூர் நீலகிரி மாவட்டம்  கேரள மாநில எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள் அடிக்கடி கொட்டப்படுவதாக உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


எல்லை வழியாக ஆபத்தான கழிவுகள்


கேரள மாநிலத்தின் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கிளினிக்குகளில் இருந்து வரும் கழிவுகள் சிரிஞ்சுகள், ஊசிகள், மருந்துப் பாட்டில்கள், கையுறைகள், இரத்தம் கலந்த பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டர், வேதிப்பொருட்கள் ஆகியவை அதிக அளவில் பந்தலூர், பாடந்துரை, தேவர்சோலை எல்லைப் பகுதிகளில் எரிதல் மற்றும் காடுகளில் கொட்டப்படுவதாக தெரியவந்துள்ளது.


பொதுமக்கள் அச்சம் குப்பைகளில் கத்திகள், ஊசிகள் கிடக்கின்றன. இதனால் மிருகங்கள் காயம் அடைவதோடு, மனிதர்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எல்லை சாலைகளில் நள்ளிரவு நேரங்களில் வாகனங்கள் வந்து கழிவுகளை கொட்டிவிட்டு தப்பிச் செல்கின்றன” என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர்.


சுற்றுச்சூழல் பாதிப்பு வனப்பகுதியில் இவ்வாறு கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மழைநீருடன் கலந்து ஓடைகள், ஆறுகளில் சேர்ந்து குடிநீரையும் மாசுபடுத்தும் அபாயம் அதிகம் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் கூட அதிகம் வருகை தரும் இடங்களில் இத்தகைய மருத்துவக் குப்பைகள் பரவியிருப்பது மாவட்டம் முழுவதும் ஆரோக்கியத்துக்கு பெரும் ஆபத்தாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.


நிர்வாக நடவடிக்கை கோரிக்கை இந்த விவகாரத்தில், நீலகிரி மாவட்ட எல்லைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும், இரவு நேரங்களில் சோதனை வலையமைப்புகளை போலீசார் கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


 நீலகிரி எல்லை பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாகக் கூறப்படும் புகார் மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை கோரிக்கையையும் எழுப்பியுள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad