தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து வித தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து வித தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை


 தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து வித தொழிலாளர்களுக்கும்  20 சதவீதம் போனஸ் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 


இதுகுறித்து அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் இந்திரஜித் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேயிலை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் தேயிலை தோட்டங்களில் பெரும் கூலியை அடிப்படையாக மட்டுமே கொண்டுள்ளது.  இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளில் கல்வி மருத்துவம் எல்லாம் இதில்தான் அடங்கும்.  


தோட்ட தொழிலாளர்கள் பண்டிகை கொண்டாடி மகிழும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளத்தை அடிப்படையாக கொண்டு கணக்கீடு செய்து போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் 20% போனஸ் வழங்கப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் இதன்மூலம் குழந்தைகள் புத்தாடை, இனிப்புகள் வாங்குவதுடன், கிடைக்கும் தொகையில் பழைய கடன்களை செலுத்தியும் வந்தனர்.  


இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் போனஸ் என்பது போராடி பெரும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் தான் உழைத்த உழைப்பில் சார்ந்து கிடைக்கும் போனஸ் பெறவும் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.


தங்களின் சிறந்த ஆட்சியில் கடந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க அறிவிப்பு வழங்கப்பட்டது ஆனால் அவை அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மட்டும் 20.சதவீத போனஸ் வழங்கப்பட்டது. மற்ற தனியார் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் மட்டுமே வழங்கினார்கள். 


இது தொழிலாளர்களிடம் வேறுபாடு ஏற்படுத்தி தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்த பிள்ளைகளின் மனதளவிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதுவும் குறைந்த பட்சமாக வழங்கவேண்டிய போனஸ் ₹.7,500 ரூபாய் முதல் ₹.10,000 வரை மட்டுமே தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது


இது சட்டபடி வழங்கப் படவேண்டிய தொகையில் மிக குறைந்த தொகையே ஆகும். வரும் 2026ம் ஆண்டிலும் தங்களின் ஆட்சியே தொடரும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்பது உறுதியாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் போனஸ் அறிவிப்பும் இருக்கும் என்றே தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றோம். கடந்த ஆண்டு அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அறிவித்தது போல இந்தாண்டு தமிழகத்தில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு முறையாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட வேண்டும். அவை முறைப்படி கணக்கீடு செய்து அதிகபட்ச போனஸ் தொகை தொழிலாளர்களுக்கு சென்று சேர உரிய ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad