விவசாய சங்க தலைவர் ஜி.கே. விவசாய மணி அவர்கள் தலைமையில் 79வது சுதந்திர தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

விவசாய சங்க தலைவர் ஜி.கே. விவசாய மணி அவர்கள் தலைமையில் 79வது சுதந்திர தின விழா


திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவை இனிதே கொண்டாடப்பட்டது  இந்த விழாவிற்கு சங்க தலைமை செயலகத்தில் விழா கமிட்டியின் நிர்வாகிகள் குருநாதன் மற்றும் இராமேஷ் ஆகியோர் தலைமையில் இறைவணக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் தொடங்கியது அதை தொடர்ந்து மாநில தலைமை நிலைய பேச்சாளர் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார் பிறகு  சங்க நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து தலைமை  உரையாற்றினார் அதை தொடர்ந்து நிர்வாகி சென்னியப்பன் சிறப்புரை ஆற்றினார் செல்வி ஹேமப்பிரியா நன்றி உரையாற்றினார் அதன் பின்னர் நாட்டுப்பண் பாடலுடன் விழா நிறைவுற்றது கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி காலை உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் உறுப்பினர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர் சுமார் 300 ருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த விழாவில் சங்க நிறுவன தலைவர் ஜி. கே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் குழந்தைகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லி அரவணைத்து இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார் இதை கண்ட பெற்றோர்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்றனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad