திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆன்டிக்காடு பகுதியில் கடந்த 25.09.2015 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண்பிரேதம் கழுத்தை அறுத்து இறந்து கிடந்தது குறித்து மூலனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் புலன் விசாரணையில் கொலையான நபர் ஜெகதீஸ்வரன் (30) தாளக்கரை, தாராபுரம் என்பதும், மேலும் அவர் வாடகைக்கு கார் ஓட்டும் தொழில் செய்து வந்ததும், கடந்த 24.09.2015 ஆம் தேதி மதியம் ஒரு நபர் அவரை வாடகைக்கு கரூர் போக வேண்டுமென அழைத்துச் சென்று, கொலை செய்துவிட்டு காரை திருடி சென்றதும் தெரிய வந்ததால், இவ்வழக்கின் சட்டப்பிரிவு 364,302,394 r/w 397 IPC ஆக மாற்றம் செய்யப்பட்டதுடன் எதிரியான வீரபாபு (36) த/பெ.முருகன், R.S ரோடு, வடமதுரை, திண்டுக்கல் என்பவரை கண்டுபிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.பிறகு இவ்வழக்கில் குற்றஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், எதிரி வீரபாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இன்று 01.08.2025-ம் தேதி வீரபாபுவுக்கு, 364 IPC சட்டப்பிரிவிற்கு ஆயுள் தண்டனை & ரூ. 5000/-அபராதமும், 302 IPC சட்டப்பிரிவிற்கு ஆயுள் தண்டனை & ரூ. 5000/- அபராதமும், 394 r/w 397 IPC சட்டப்பிரிவிற்கு ஆயுள் தண்டனை & ரூ. 5000/- அபராதமும், என மொத்தம் 3 ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி தண்டனை விதித்து, மாண்புமிகு ADJ-III நீதிமன்ற நீதிபதி, தாராபுரம் அவர்கள் தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து மேற்படி குற்றவாளி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்தவழக்கில் சிறந்த முறையில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டணை பெற்றுத்தந்த மூலனூர் காவல்நிலைய அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக