ஆகஸ்ட் 1, நவதிருப்பதி களில் ஒன்பது ஆன ஆழ்வார்திருநகரி கோயிலில் வடக்கு மாட வீதி வடகிழக்கு மூலையில் பட்சிராஜர் என்ற கருடன் அவதார தினம் கொண்டாடப்பட்டது.
மகாவிஷ்ணுவின் வாகனம் ஆகிய கருட பகவான் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் கருட ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம்.
மேலும் வேண்டுதல் காரணமாக மொட்டை போடுதல். சிதறு தேங்காய் போடுதல். பால் அபிஷேகத்திற்கு வழங்குதல் போன்ற பிராத்தனைகள் நடைபெறும். இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு திருமஞ்சனம்.
தொடர்ந்து சன்னதி கருடனுக்கும் திருமஞ்சனம் நடந்தது. 8 30 மணிக்கு தீபாராதனை. நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலையில் மாடவீதி மதில் மேல் உள்ள கருட பகவானுக்கு மாலை 6 மணிக்கு ஊர் மக்கள் கொண்டு வந்த பால் சுமார் 500 லிட்டர் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் கும்பம் வைத்து திருமஞ்சனம் நடந்தது.
இரவு 12 மணிக்கு புது வஸ்திரங்களை அணிவித்து மாலைகள் அலங்காரம் செய்து தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன். சுவாதி. விவேக். பாலாஜி.அறங்காவலர் குழத் தலைவர் ராமானுஜன் என்ற கணேசன் உறுப்பினர்கள் கிரிதரன். ராம லட்சுமி. காளிமுத்து. செந்தில். நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக