சேத்தியாதோப்பு அருகே கானூர்ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 36 வது ஆண்டு தீமிதி திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

சேத்தியாதோப்பு அருகே கானூர்ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 36 வது ஆண்டு தீமிதி திருவிழா.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கானூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடித்திருவிழா 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்குஅம்மன் அருளாசி வழங்கி வந்தார். விழாவில் சிகர நிகழ்வான 36 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில்  நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூங்கரகம், சக்தி கரகம் இவைகளை தலையில் சுமந்தபடி வீதிகளில் ஊர்வலமாக வந்து தீமிதித்தனர். இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முத்துமாரியம்மனை வணங்கினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad