சேத்தியாதோப்பு அருகே பூதங்குடியில் ஸ்ரீ ராஜசக்தி மகாமாரியம்மன் கோவில் பால் குட ஊர்வலம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

சேத்தியாதோப்பு அருகே பூதங்குடியில் ஸ்ரீ ராஜசக்தி மகாமாரியம்மன் கோவில் பால் குட ஊர்வலம்.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் உள்ளராஜசக்தி மகா மாரியம்மன் கோவிலின்
ஆடி மாத பால்குட ஊர்வலம் நடைபெற்றது.  கடந்த 4ம்தேதி காப்பு கட்டி,  பின்னர் தினசரி பூஜைகள் நடைபெற்று சிகர நிகழ்வாக  யாகசாலை பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் வீராணம் ஏரிக்கரையிலிருந்து அலகுக் காவடி, பறக்கும் காவடி, செடல் காவடி , பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு பால்குட ஊர்வலம் துவங்கியது. பக்தர்கள் பால் குடத்துடன்  பூதங்குடி வீதிகளில் வலம்வந்து ராஜசக்தி மகாமாரியம்மன் ஆலயத்திற்குள்ளே பால் கூடங்கள் இறக்கி  வைக்கப்பட்டு அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வணங்கினர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad