சேத்தியாத்தோப்பு அருகே நங்குடியில் அறுவடைக்குத் தயாரான பல ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

சேத்தியாத்தோப்பு அருகே நங்குடியில் அறுவடைக்குத் தயாரான பல ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்.

கடலூர் மாவட்டம்
சேத்தியாத்தோப்பு அருகே நங்குடி கிராமப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த பல ஏக்கர்நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது. இக்கிராம வயல்வெளிகள், மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள நிலங்களில் இருந்து வெளியேறும் மழைத் தண்ணீர் இப்பகுதிவிவசாய விளை நிலங்களில் வந்து தேங்கி வருகிறது. ஆரம்பத்தில் 
அருகில் செல்லும் வடிகால் வாய்க்கால் மூலம் தேங்கும் மழைத் தண்ணீர் வெளியேறி வந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறைப் பணியால் தடைபட்டுள்ளது.இதனால் மழைத்
தண்ணீர் வெளியேற வழியில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். தங்கள் பகுதிக்கு வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வார வேண்டும் என 
பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் வடிகால் வாய்க்கால் வெட்டப்படவில்லை மாவட்ட நிர்வாகமும்,  அரசும் தங்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதாக  விவசாயிகள் வேதனையோடு குற்றச்சாட்டு வைக்கின்றனர். தாலி உட்படவீட்டில் உள்ள நகைகள் அனைத்தையும் அடகுவைத்து தான் விவசாயம் செய்கிறோம். அறுவடை செய்து நெல்மணிகள் கைக்கு வரும் நேரத்தில்இப்படி மழைத் தண்ணீரில் மூழ்கி விட்டதே என்று விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல், தண்ணீரைவடிய வைக்கவும் வழி இல்லையே என்று செய்வதறியாது புலம்பித் தவிக்கிறார்கள். வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரினால் மட்டுமே நிலத்தில் உள்ள தண்ணீர் வடிந்து தங்கள் பிரச்சனை நிரந்தரமாக தீரும் என்று நங்குடிப் பகுதி விவசாயிகள் வேதனைக் கண்ணீரோடு தெரிவிக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad