பட்டியலின மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
பட்டியலின மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யபட்டது பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் அரச உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 64 மாணவி மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயராஜ் என்ற ஆசிரியர் வேறு ஒரு அரசு பள்ளியில் இருந்து மாறுதல் ஆகி மருவாய் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைபள்ளியல் கடந்த 7-7-2025 அன்று பணியில் சேர்த்துள்ளார்.
இதற்கிடையே அந்த ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக பட்டியலின பள்ளி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து ஆசிரியர் ஜெயராஜ் மீதி நடவடிக்கைகள் எடுக்க கோரி பள்ளியினை பெற்றோர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முற்றுகையிட்டுள்ளதாகவும் வடலூர் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களை சமாதம் செய்து வைத்ததாக கூறபடுகிறது.
இந்த நிலையல் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் ஜெயராஜ் குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றும் செய்யபட்டார்.
இந்த தகவல் அறிந்த சைல்டு ஹெப் லைன் அமைப்பு தாமாக முன் வந்து இந்த பாலியல் சீண்டல் நிகழ்வை கையில் எடுத்து பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் செய்தது.
அதனை தொடர்ந்து நெய்வேலி அனைத்து காவல்துறையினர் ஆசிரியர் ஜெயராஜ் கைது செய்யபட்டு விசாரணை செய்து போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக