சிறுபாலை ஸ்ரீ அருள்மிகு வாழவந்தாள் அம்மன் ஆலயத்தில் 4ஆம் ஆண்டு முளைப்பாரி திருவி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

சிறுபாலை ஸ்ரீ அருள்மிகு வாழவந்தாள் அம்மன் ஆலயத்தில் 4ஆம் ஆண்டு முளைப்பாரி திருவி


சிறுபாலை ஸ்ரீ அருள்மிகு வாழவந்தாள் அம்மன் ஆலயத்தில் 4ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சிறுபாலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு வாழவந்தாள் அம்மன் ஆலயத்தில் 4ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா விசுவாவசு வருடம் ஆடி மாதம் 21ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழாவானது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவாகும். கடந்த வாரம் ஆடி 11ஆம் தேதி தொடங்கப்பெற்ற இவ்விழா முத்து வாங்குதல், முத்துபரப்புதல், பொங்கல் பூஜை ஆராதனை, விசேஷ அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள், வள்ளி திருமணம் நாடகம் மற்றும் அதனைத் தொடர்ந்து தினமும் இரவு பெண்கள் பாரம்பரிய உடையணிந்து கும்மியாட்டம், ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்து ஒயிலாட்டம் என சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் இறுதிநாளான ஆடி மாதம் 21ஆம் தேதி புதன்கிழமையன்று வானவேடிக்கைகள் முழங்க பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், அதன் பின்பு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரியை வீதிகளில் தலையில் சுமந்து வீதி உலா வந்து முளைப்பாரி எடுத்து கொட்டி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இவ்விழாவை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தக்கோடி பெருமக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்து விழாவை கண்டு ரசித்து, அம்மனின் அருளாசி பெற்றுச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad