பீகாரில் வாக்காளர் நீக்கத்தை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

பீகாரில் வாக்காளர் நீக்கத்தை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.


பீகாரில் “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்” என்ற பெயரில் பல லட்சக்கணக்கான வாக்குகளை முறைகேடாக நீக்கியது தொடர்பாக, மத்திய தேர்தல் ஆணையம் மோடி அரசின் அரசியல் கருவியாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை தகர்க்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி, கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.


கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, "மோடி அரசை எதிர்க்கவும்", "மக்கள் உரிமையை காப்பதற்கும்" உறுதிமொழியுடன் முழக்கங்களை எழுப்பினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad