பொது விநியோக திட்டத்தின் சேவை களை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு சிறப்பு குறை தீர்வு நாள்!
வேலூர் , ஆகஸ்ட் 6 -
வேலூர் மாவட்டம் பொது விநியோகதிட்ட த்தின் சேவைகளை அனைத்து மக்களுக் கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் 09.08.2025 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகா மில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப் படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரி வித்து தீர்வு காணலாம் என தெரிவித் தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
எனவே,பொதுமக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெறும் சிறப்பு குறைதீர்வு முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் ஒளி நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி. தெரிவித்துள்ளார்.
*சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறும் இடங்கள்:*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக