தினமும் 17.5 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3.5 லட்சம் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தி, சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் நான்காம் கட்டமாக காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார்
அதன் தொடர்ச்சியாக, திருப்பூர், பார்க் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் புனித ஜோசப் தொடக்க பள்ளியில் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் MLA அவர்கள் துவக்கி வைத்து மாணவர்களுடன் காலை உணவு அருந்தினார். இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எம் பி அமித் இ ஆ பா அவர்கள் நான்காவது மண்டல தலைவர் இல பத்மநாபன் துணை ஆணையர் சுந்தர்ராஜன் துணை ஆணையர் கணக்கு தங்கவேல் ராஜன் திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி கே டி மு நாகராசன் தலைமை ஆசிரியர் ஆசிரிய பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பள்ளிக்கு வரும் எந்த குழந்தையும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதே முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இலக்கு என்று க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் கூறினார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக