ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்கள் வழிபட்டனர். மீனாட்சி சுந்தரனார் சாலை, ஆர் கே வி ரோடு போன்ற பல்வேறு இடங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. பூஜை பொருட்களான தேங்காய், பழம், வெற்றிலை, அருகம்புல், பூசணி போன்றவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதுடன், பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது. சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், கள்ளு கடைமேடு, மாநகராட்சி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு
வழிபாடுகள் நடைபெற்றன.
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக