அமெரிக்க அரசின் 50 சதவீத வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கருத்தில் கொள்ளாமல்,
கபடநாடகம் அரங்கேற்றிடும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக
வருகின்ற செப்டம்பர் 02ம் தேதி, திருப்பூர் ரயிலடி அருகில் திமுக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பூர் மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்பராயன் எம்.பி., திருப்பூர் மாநகராட்சி மேயர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ந.தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளர் TKT.மு. நாகராசன், மற்றும் INDIA கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக