இந்துமுன்னணி சார்பில் உடுமலை மற்றும் குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 90 க்கும் மேற்பட்ட சிலைகள் ஆங்காங்கு வைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த சிலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மாலை உடுமலை நகரில் உள்ள நேதாஜி மைதானத்திற்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கு ஊர்வல துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஊர்வலம் கச்சேரி வீதி, தளி சாலை, மாரியம்மன் கோவில் வீதி, பழனி ரோடு வழியாக சென்று அமராவதி ஆற்றில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன.
இந்த ஊர்வலத்தால் உடுமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக