ராணிப்பேட்டையில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கோரிக்கை மாநாடு!!!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 31 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் வாலாஜா பைபாஸ் சாலை மேம் பாலம் அருகில் அமைந்துள்ள தமிழ் மஹால் திருமண மண்டபத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பாக ராணிப் பேட்டை மாவட்ட முதல் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வரு வாய்துறை அலுவலர் களுக்கு சிறப்பு பணிபதுகப்பு சட்டம் கொண்டுவர கோருதல் கருணை அடிப் படையில் பணி நியமனம் 5% என குறை கபட் டதை 25%ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 7அம்ச கோரிக்
கைகளை வலியுறுத்தி மாவட்ட மா நாடு நடைபெற்றது.மேலும் மாநாட்டி ற்கு வருவாய் துறை சங்க ராணிப்பே ட்டை மாவட்ட தலைவர் ஜே.கே விஜய சேகர் தலைமை வகித்தார்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பா.சிவக்குமார் வர வேற்புரை ஆற்றினார். நில அளவர் கள் ஒன்றிணை ப்பு சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் V.தியாகராஜன் துவக்க வுறை ஆற்றினார்.தமிழ்நாடு நில அளவர் கள் ஒன்றிப்பு சங்க மாநில தலைவர் j.ராஜா வருவாய்துறை சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார் மற்றும் மாவட்ட பொருளாளர் கன்னி யப்பன் ஆகியோர் தீர்மான உரையாற் றினார்கள்.வருவாய் துறை சங்க முன்னாள் மாவட்ட பொறுப் பாளர்கள் குப்பன், பாபு, வாழ்த்துறை வழங்கி னார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதி யில் கிராமநிர்வாக அலுவலர் சங்க த்தின் மாவட்ட செயலாளர் மு.சக்கர வர்த்தி நன்றி உரையாற்றினார் இதில் வருவாய் துறை அலுவலர்கள் சுமார் 250 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக