கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பேருந்து நிலையம் அருகே தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது, முன்னதாக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட தேமுதிக அவைத்தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற அன்னதான விழாவில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பா. சிவகொழுந்து கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார், நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஏ பி ராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமோ சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் செல்வராஜ் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜெயபிரகாஷ் மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜவேல் மாவட்ட பிரதிநிதி காஜிராஜன் மாவட்ட கேப்டன் மன்ற முன்னாள் துணை செயலாளர் பெரியண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக