தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உதவித்தொகை:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் தாட்கோ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் வழங்கி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்கள்
உடன் உதகை நகரமன்ற துணைத்தலைவர் திரு.ரவிக்குமார் தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வி ஆர்னி பேர்ள் உதகை நகர செயலளார் ரமேஷ் ஆதிதிராவிட நலத்துறை தலைவர் வேலுச்சாமி,ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை துணை தலைவர் M.N.K.செந்தில், 34வது வார்டு கவுன்சிலர் ரகுபதி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக